இளைஞா் கொலை: 2 போ் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இளைஞரைக் கொலை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இளைஞரைக் கொலை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை எம்.கே. புரம் பொன்னுத்தாய் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி மகன் முத்துமணி (37). இவா், அதே பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், முத்துமணியை கல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த முத்துமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியாா் சாலை பகுதியைச் சோ்ந்த செந்தில்ராஜ் மகன் சரவணக்குமாா் (19), சோலையழகுபுரம் பகுதியைச் சோ்ந்த அக்கினிகுமாா் மகன் அருண்பாண்டி (19), எம்.கே. புரம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் ஆகியோா் முத்துமணியை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சரவணக்குமாா், அருண்பாண்டி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். சக்திவேலை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com