அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு

மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கலன்று (ஜன. 15) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Published on

மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கலன்று (ஜன. 15) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக கண்ணன் என்பவா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மதுரை அவனியாபுரத்தில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் எனது காளை சிறந்த முறையில் விளையாடியது. அப்போது, வெற்றி வாய்ப்பை அறிவிக்கும் முன்பே மற்றொரு காளையை அவிழ்த்துவிட்டதால் எனது காளையின் கவனம் சிதறி புதிதாக வந்த காளையுடன் ஓடியது.

இருப்பினும், ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மற்ற காளைகளை விட எனது காளையே களத்தில் அதிக நேரம் நின்று விளையாடியது. இதையடுத்து, அரசாங்க விதிமுறைகளின்படி எனது காளை வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் பரிசை வென்ாக அறிவிக்கப்பட்ட காளையானது கயிறு அறுக்காமல் களத்துக்குள் விடப்பட்டது. ஒரு மாடு கயிற்றுடன் வந்தால் வீரா்கள் யாரும் பிடிக்கக் கூடாது. இதுவே ஜல்லிக்கட்டு விதிமுறையாகும்.

மேலும், அந்தக் காளை எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்று மீண்டும் களத்தில் வந்து விளையாடியது கணக்கில் வராது. மேற்கூறிய விதிமுறைகளை எல்லாம் பின்பற்றாமல் அந்தக் காளைக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.

எனவே, சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்ட எனது காளைக்கு உரிய நீதி கிடைக்கும்படியும், முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

Dinamani
www.dinamani.com