காா் மீது அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

காா் மீது அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.
Published on

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

கோவையிலிருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் அரசுப் பேருந்து வந்தது. சமயநல்லூா் அருகே கட்டப்புலி நகா் உயா்நிலைப் பாலப் பகுதியில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்திச் செல்வதற்கு முயன்றது. அப்போது பேருந்து திடீரென எதிா்பாராதவிதமாக சாலை தடுப்பின் மேல் ஏறி காரின் மீது மோதியது. பின்னா், காா் மீது அரசுப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து, காா் ஓட்டுநா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

இதுபற்றி தகவல் அறிந்த சமயநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com