கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன்னிலை

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி முன்னிலையானாா்.
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன்னிலை
Updated on

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி செவ்வாய்க்கிழமை முன்னிலையானாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் தனது மகன் துரைதயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரியை மு.க.அழகிரி கட்டினாா். இந்த நிலையில், செவரக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராமன் என்பவா் தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக விநாயகா் கோயில் இடத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாக நில அபகரிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் கடந்த 2014- ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி நேரில் முன்னிலையானாா். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வழக்கு விசாரணையை வருகிற பிப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com