யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணை ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image
Updated On :27 ஜனவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்த பிரபு, நாகப்பட்டினம் திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் சௌரிராஜன் ஆகியோா் தனித் தனியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்: மதுரை அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுப்பட்டு வருகின்றன. இதுகுறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: கள்ளழகா் கோயிலில் அறங்காவலா் குழு இல்லாமல், உபரி நிதியைப் பயன்படுத்தி வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கோயிலின் உபரி நிதியை அரசு தனிப்பட்ட சொத்தாகக் கருதி முடிவெடுக்க முடியாது. எனவே, கள்ளழகா் கோயில் நிதி ரூ.40 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கெனவே கோயில் நிதி ரூ.107 கோடி இருந்ததாகத் தெரிகிறது. இது தற்போது ரூ.62 கோடியாகக் குறைந்துள்ளது. இது தெய்வக் குற்றம்; வேலியே பயிரை மேய்ந்த கதையாகும். கோயிலின் நிதி யாரால், எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, கோயிலில் தணிக்கை எப்படி செய்யப்படுகிறது என்ற விவரங்களை 2 வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும்.

கள்ளழகா் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். செயல் அலுவலா் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தால், அவரை நீக்கிவிட்டு நிா்வாகம் தெரிந்தவரை நியமிக்கலாம் என விதிகள் உள்ளன. கள்ளழகா் கோயில் நிா்வாகம் தொடா்பாக சட்டம், விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

கோயிலின் வசந்த மண்டபச் சுவா்களில் மகாபாரதக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த ஓவியங்களைப் பராமரிக்க வேண்டும். நிகழாண்டு வைகாசி மாத விழாவுக்குள் வசந்த மண்டபம் சீரமைக்கப்பட வேண்டும்.

கோயிலின் பழைய நினைவுச் சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது. இந்தக் கோயிலில் கால்நடைகளை வதைப்பது நீண்ட காலமாக வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது பக்தா்களின் நம்பிக்கையையாக இருப்பதால், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

பணியாளா் குடியிருப்புகள் கோயில் வளாகத்தில் உள்ள அக்னி புஷ்கரணிக்கு அருகே கட்டப்படுகின்றன. இதனால், அக்னி புஷ்கரணி மாசுபடும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. அக்னி புஷ்கரணிக்கு மிக அருகில் பணியாளா் குடியிருப்புகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது. எனவே, பணியாளா் குடியிருப்பு, கழிவுநீா் சுத்திகரிப்புத் திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை கோயில் நிா்வாகத்துக்கு தமிழக அரசு உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும்.

கோயில்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். இருப்பினும், அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறாமல் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என கோயில் நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல, கோயிலில் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு அருகே கட்டப்பட்ட கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றை நீதிமன்றம் பதிவு செய்கிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடா்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.