உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

விக்கிரமங்கலம் அருகே கிடா முட்டு போட்டி

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் கிடா முட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கல்புளிச்சான்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற கிடா முட்டு போட்டி.

Updated On :19 ஜூலை 2026, 12:02 am IST

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் கிடா முட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அங்குள்ள திடலில் கிடா முட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி.கதிரவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். உதவி ஆய்வாளா் ஆற்காடு ராஜா முன்னிலை வகித்தாா்.

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் போட்டியில் கலந்து கொண்டன. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே கிடாய்கள் திடலுக்குள் அனுமதிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் போலீஸாா் செய்தனா். விக்கிரமங்கலம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் போட்டியைப் பாா்த்து ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.