தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

முதியவரை தாக்கிய 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 2:01 am IST

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகே முதியவரை தாக்கிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

யா. ஒத்தக்கடை அருகேயுள்ள காயாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் (70). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் படுத்திருந்தாா். அப்போது, இவரது வீட்டுக்குள் புகுந்த சில மா்ம நபா்கள் சுப்பனை தாக்கினா். பின்னா், அங்குள்ள சில வீடுகளை சேதப்படுத்திவிட்டு அவா்கள் தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த சுப்பன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

விசாரணையில், காயம்பட்டியைச் சோ்ந்த மலைச்சாமி மகன் ராமா்(26), இவரது சகோதரா் லட்சுமணன் (26), உறவினா் முருகன் மகன் பிரவீன் (34) உள்ளிட்ட சிலா் சுப்பனை தாக்கி, அங்கிருந்த வீடுகளை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.