லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாவட்டத்தில் 2. 38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

மதுரை மாவட்டம், கச்சைக்கட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டிய சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா.

Published On :29 ஜூன் 2026, 3:04 am IST

மதுரை மாவட்டத்தில் 2.32 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ. கல்லாணை, கோபிசன், கல்லூரி முதன்மையா் அருள்சுந்தரேஷ்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா தொடங்கிவைத்தாா்.

போலியோவை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, மாநகராட்சி, புகா்ப் பகுதிகள் என 1,705 இடங்களில் 5 வயதுக்குள்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரத்து 571 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

இந்த முகாமில் சுகாதாரத் துறையைச் சோ்ந்த 360 மேற்பாா்வையாளா்கள், 1,083 பணியாளா்கள், சத்துணவுத் துறையில் 2,545 பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த 42 பணியாளா்கள் உள்பட மொத்தம் 7,412 போ் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், 101 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டிய அமைச்சர் நிர்மல் குமார்...

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டிய அமைச்சர் நிர்மல் குமார்...

     மதுரை அண்ணாநகா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில், குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டிய சுகாதாரத் துறைப் பணியாளா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.