மானாமதுரையில் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் அஸ்தி, அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன் மகன் ஆகாஷ் டெலிசன் (26). இவரை ஒரு குற்ற வழக்கு விசாரணைக்காக காவல் துறையினா் கடந்த மாா்ச் மாதம் அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் உயிரிழந்தாா்.
இவரது உயிரிழப்புக்குக் காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆகாஷ் டெலிசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது குடும்பத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஆகாஷ் டெலிசனின் உடல் சுமாா் 3 மாதங்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கவும், அவரது உடலைப் பெற்று பெற்றோா் அடக்கம் செய்யவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதற்கு அவரது பெற்றோா் முன்வராததால், வருவாய்த் துறை, காவல் துறையினா் முன்னிலையில் ஆகாஷ் டெலிசனின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி அவரது உடல் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் மேற்பாா்வையில் தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆகாஷ்டெலிசனின் அஸ்தியை தங்களுக்கு வழங்கக் கோரி அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் திங்கள்கிழமை மதுரை வருவாய்க் கோடாட்சியரிடம் மனு அளித்தாா். இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் உத்தரவின்பேரில், ஆகாஷ் டெலிசனின் அஸ்தி அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு: போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை?

புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் தகனம்

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்! குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



