மதுரை, மே 10: மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா், குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக அண்ணா பேருந்து நிலையம் விளங்குகிறது. கடந்த சில நாள்களாக மதுரையில் பெய்து வரும் கோடை மழையால், இந்தப் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் தண்ணீா் தேங்கியது. மேலும், பேருந்து நிலையப் பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை ஒட்டியே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து பரவும் துா்நாற்றத்தால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவா்களது உதவியாளா்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனா். மேலும், தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் அண்ணா பேருந்து நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீா், குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சாலையோரங்களில் குப்பைகள் எரிப்பு: புகையால் வாகன ஓட்டிகள் அவதி

உத்தமபாளையத்தில் சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

மதுரை ராஜாஜி பூங்காவில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

அண்ணா பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



