எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
    எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கவிதை, ஓவியம்,
கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  
இதில் கொடைக்கானல்,பூம்பாறை,நாயுடுபுரம்,வில்பட்டி, மன்னவனூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தேடாச் செல்வம் தலைமை வகித்தார். வில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாரீஸ்ராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குறிஞ்சி அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவர் ராஜேஸ் கண்ணா பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
குறிஞ்சி அரிமா சங்கத்தின் நிர்வாகிகளான தண்டபாணி, குத்தாலிங்கம், பார்த்த சாரதி, மோகன் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com