கொடைக்கானலில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்

கொடைக்கானல் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

கொடைக்கானல் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதுகுறித்து இக்குழுவின் தலைவரும், கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலருமான அரவிந்த் கூறியதாவது: கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு வழக்கம் போல நடமாடும் மருத்துவ சேவை நடைபெற்று வருகிறது.  நடமாடும் இரண்டு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு  அனைத்து கிராமப் பகுதி   பள்ளி  மாணவர்களுக்கும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையும், பொது மக்களுக்கு தனியாக சிகிச்சையும் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. அதே போல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பேத்துப்பாறை,  மேல்பள்ளம் ஆகியப் பகுதிகளில் இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நடமாடும் மருத்துவக் குழுவில் மருத்துவர்கள் ராணி வீரகுமார்,  அருண், பிரதீப் மற்றும் செவிலியர் மருந்தாளுநர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com