கொடைக்கானலில் பெண்கள் அமைப்பு சார்பில் மதுக்கடையை அகற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் பேருந்து நிலையம் உட்வில்சாலையில் ஆரம்பப் பள்ளி, வழிபாட்டுத்தலம் போன்றவை உள்ளன.
இந்நிலையில் இப்பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரி கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பெண்கள் அமைப்பின் சார்பில் பேருந்து நிலையம் உட்வில்சாலையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது மதுக்கடையை திறக்க விடாமல் பெண்கள் அமைப்பினர் அப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸார், பெண்கள் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்பட வில்லை.
இதனால் ஜெஸிந்தா, மகேந்திரபாபு உள்ளிட்ட பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 75 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







