குறுவட்ட அளவிலான கபடிப் போட்டியில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் அதிக அளவில் வெற்றிப் பெற்று அடுத்தச் சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் வட்டார அளவிலான குறுவட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இருபாலருக்கான கபடிப் போட்டியில், 17 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. 14, 17 மற்றும் 19 வயதிற்குள்பட்டோருக்கான போட்டிகளை, வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார். வத்தலகுண்டு பள்ளி தலைமையாசிரியர் தங்கராசு முன்னிலை வகித்தார். இந்த போட்டிகளின் முடிவில் முதலிடம் பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றன.
வெற்றிப் பெற்ற அணிகள் விவரம்:
ஆண்கள் பிரிவு: 14 மற்றும் 17 வயதிற்குள்பட்டோர் பிரிவில் அணைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அணிகளும், 19 வயதிற்குள்பட்டோர் பிரிவில் அய்யம்பாளையம் என்பிஆர் அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன.
பெண்கள் பிரிவு: 14 வயதிற்குள்பட்டோர் பிரிவில் பெரும்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதிற்குள்பட்டோர் பிரிவில் அணைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியும், 19 வயதிற்குள்பட்டோர் பிரிவில் ஹெச்என்யூபிஆர் பெண்கள் பள்ளியும் முதலிடம் பிடித்தன.
போட்டிக்கான ஏற்பாடுகளை நெடுமாறன், செல்வக்குமார், ஸ்டாலின் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









