திருப்பூரில் முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் பி.முருகன் (20). இவரது நண்பர் ஆறுமுகம் (22). இவர்கள் இருவரும் திருப்பூர் வசந்தம் நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தனர். மேலும், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வசந்தம் நகரில் உள்ள வேறு ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முருகன் சடலம் கிடந்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ஈ.வீரமணிகண்டன் என்கிற சசிகுமார் (22) இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: முருகன், வீரமணிகண்டன் ஆகிய இருவரும் உறவினர்கள். சிலுக்குவார்பட்டியில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன் மற்றும் சிலர், சசிகுமாரைத் தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த 4 நாள்களுக்கு முன் திருப்பூர் வந்த சசிகுமார், முருகனை மது அருந்த அழைத்துள்ளார். பின்னர் ஏற்பட்ட தகராறில் கத்தியால் முருகனைக் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சசிகுமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கபிலா்மலை அருகே அனுமதி இன்றி கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தல்

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


