/

பழனி மலைக் கோயிலில் அண்ணா நினைவு தின பொதுவிருந்து

பழனி மலைக் கோயிலில் சனிக்கிழமை அண்ணா நினைவு தின பொதுவிருந்து நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:18 am

DIN

பழனி மலைக் கோயிலில் சனிக்கிழமை அண்ணா நினைவு தின பொதுவிருந்து நடைபெற்றது.
 இதையொட்டி மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையின் போது தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மலைக் கோயில் அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற அண்ணா நினைவு பொதுவிருந்து நிகழ்ச்சிக்கு பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ்  தலைமை வகித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு  அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. அன்னதானத்தைத் தொடர்ந்து கோயில் உண்டியலில் காணிக்கையாக வரப்பெற்ற வேட்டி, சேலைகள் ஏழை, எளியவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் , துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா, மேலாளர் உமா, முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபாலு, செல்லச்சாமி, அதிமுக நகரச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.