திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கூடுதல் "தட்கல் டிக்கெட்' பதிவு செய்ய வலியுறுத்தல்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கூடுதலாக தட்கல் டிக்கெட் பதிவு செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கூடுதலாக தட்கல் டிக்கெட் பதிவு செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் ரயில் பயணிப்போர் ஆலோசனைக் கமிட்டி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
அதில், திண்டுக்கல் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலரும், ரயில் பயணிப்போர் ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான ஏ.பாலன் கலந்து கொண்டார். 
கூட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு தேவையான பல்வேறு வசிகள் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மூடப்பட்டுள்ள 2ஆவது முன்பதிவு கவுண்டரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
 ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு, காட்சிப் பொருளாக உள்ள மின்தூக்கி இயந்திரத்தை (லிப்ட்) பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் வரும் அனைத்து ரயில்களையும் முதல் நடைமேடையிலேயே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் பதிவுக்கு காலை 6 முதல் 11 மணி வரை சுமார் 25 நபர்களுக்கு "டோக்கன்' வழங்கப்படுகிறது. 
ஆனால் 3 நபர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் பதிவு செய்ய முடிகிறது. 
பிற பயணிகள் ஏமாற்றத்துடன் செல்வதை தவிர்க்கும் வகையில், கூடுதல் டிக்கெட் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப்பட்டு, அகல ரயில்பாதை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட ராமேசுவரம்- கோவை விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.