முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

தோட்டத்துக்குச் செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை விவசாயி மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :25 மே 2018, 5:22 am IST

தோட்டத்துக்குச் செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை விவசாயி மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் அடுத்துள்ள ராமையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (53). விவசாயியான இவர், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து தோட்டத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இவர், புதன்கிழமை இரவு வீசிய சூறாவளியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து வழியில் விழுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்து விட்டாராம். இதில், மின்சாரம் பாய்ந்து மயங்கி கிடந்திருந்த ஜெயராஜை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.