
விநாயகர் சதுர்த்தி : திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களிலும்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,200 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
திண்டுக்கல் ரயிலடி, சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற 70ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு
லட்சார்ச்சனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முத்தங்கி அலங்காரத்துக்குப் பிறகு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.
இதேபோல், மடத்து விநாயகர் கோயில், வெள்ளை விநாயகர் கோயில், நன்மைதரும் 108 விநாயகர் கோயில், வழிகாட்டி விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மடத்து விநாயகர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
கொடைக்கானல்: கொடைக்கானல், செண்பகனூர், அப்சர்வேட்டரி, மாட்டுப்பட்டி, நாயுடுபுரம், ஆனந்தகிரி மற்றும் தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடைக்கானல் ஏரிச்சாலையிலுள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையக்கோட்டை, கன்னிவாடி, செம்பட்டி சுற்றுவட்டாரங்களில் சுமார் 182 இடங்களில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் சார்பில் விநாயகர் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் வெள்ளிக்கிழமையும், இந்துமக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் சனிக்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விருப்பாச்சி தலையூற்றில் கரைக்கப்படுகின்றன.
1,200 சிலைகள்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா மற்றும் தனியார் அமைப்புகள் சார்பிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






