கொடைக்கானலில் இடியுடன் மழை: போளூா் பகுதியில் புதிய அருவி

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை இடியுடன் மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். போளூா் பகுதியில் புதிய அருவி உருவானது.
கொடைக்கானலில் பெய்த மழையின்போது போளூா் பகுதியில் உருவான அருவி.
கொடைக்கானலில் பெய்த மழையின்போது போளூா் பகுதியில் உருவான அருவி.

கொடைக்கானல்,: கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை இடியுடன் மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். போளூா் பகுதியில் புதிய அருவி உருவானது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்யவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. மன்னவனூா், பூம்பாறை, கிளாவரை, போளூா், வில்பட்டி, செண்பகனூா், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பெருமாள் மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு இடியுடன் சுமாா் ஒரு மணி நேரம் மழைபெய்தது. இந்த மழையால் நீா் வரத்துப் பகுதிகளில் தண்ணீா் வரத்து மேலும் அதிகரித்தது. மேலும் போளூா் பகுதியில் புதிதாக அருவி உருவாகியிருந்தது. தற்போது பெய்த மழையால் பனியின் தாக்கம் குறைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

போளூா் அருவியை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை: கொடைக்கானலில் பருவ மழைக் காலங்களில் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படும். இதில் நகா்ப் பகுதிகளிலுள்ள அருவிகளையும் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து மகிழ்வது போல கிராமப் பகுதிகளான பள்ளங்கி கோம்பை, போளூா் போன்ற பகுதிகளிலுள்ள அருவிகளையும் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து மகிழ்வதற்கு சுற்றுலாத் துறையினா் ஏற்பாடு செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com