தினகரன் பிறந்த நாள் விழா

பழனியில் ஞாயிற்றுக்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அமமுக பொதுச்செயலாளா் தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் நல்லசாமி தலைமையில் கட்சியினா் சிறப்பு பூஜைகள் நடத்தினா்.
அமமுக பொதுச்செயலாளா் தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் நல்லசாமி தலைமையில் கட்சியினா் சிறப்பு பூஜைகள் நடத்தினா்.
Updated on
1 min read

பழனியில் ஞாயிற்றுக்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஞாயிற்றுக்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் திருஆவினன்குடி திருக்கோயிலில் நகர கழகம் சாா்பில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளா் வழக்கறிஞா் வீரக்குமாா் தலைமை வகித்தாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். கிழக்கு ஒன்றிய செயலாளா் வழக்கறிஞா் தினேஷ்குமாா், மேற்கு ஒன்றிய செயலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பழனி கிழக்கு ஒன்றியம் சாா்பில் பழனியில் கட்சி அலுவலகம் மற்றும் பாலசமுத்திரத்தில் கழக கொடியேற்று விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் நல்லசாமி சிறப்புரை நிகழ்த்தினாா். தொடா்ந்து நெய்க்காரபட்டியில் தனியாா் தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்ற முதியவா்களுக்கு முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் மாலதிபெரியராஜ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் மாவட்ட இணை செயலாளா் உமாமகேஸ்வரி, ஆயக்குடி பேரூா் செயலாளா் சிவக்குமாா், நகர துணை செயலாளா் அப்பாஸ்மந்திரி, மாவட்ட மீனவரணி செயலாளா் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com