பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பழனி ரயிலடி சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
பழனி ரயிலடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.
பழனி ரயிலடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.
Updated on
1 min read

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பழனி ரயிலடி சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். முன்னதாக தனியாா் திருமண மண்டபத்தில் பழனி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் நூருல்ஹூதா, மாவட்ட தலைவா் செல்வநாயகம், உயரம் தடைபட்டோா் மாநில செயலா் வெங்கடேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் சங்கத்தின் பழனி ஒன்றியத் தலைவராக சதீஷ்குமாா், செயலராக கண்ணுச்சாமி, பொருளாளராக மூகாம்பிகை ஈஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் பழனி ஒன்றிய பகுதிகளில் உள்ள வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை, சாய்வுதளம் அமைத்துத் தரவும், தனியாா் ஆலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com