/

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

News image
கொடைக்கானலில் வெள்ளிநீா் அருவிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நிவா், புரெவி புயல்களின் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்டது. மழைநின்றதும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வந்தது.

தற்போது கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டுள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. இங்குள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம், வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி, மோயா் பாயிண்ட், பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனா்.

வாட்டி எடுக்கும் குளிா்: கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பகலில் அதிகமாக வெயிலும், மாலையில் குளிரும், இரவில் அதிகப் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.

இரவு 7 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்தப் பனியின் தாக்கம் மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது. வரும் நாள்களில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.