அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 240 நாள்கள் பணி முடித்த தற்காலிக தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Updated on
1 min read

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 240 நாள்கள் பணி முடித்த தற்காலிக தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் 29ஆவது ஆண்டு பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஐ.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பேரவையின் புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சம்மேளன பொதுச்செயலா் கே. ஆறுமுகநயினாா் உரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: 240 நாள்கள் பணி முடித்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். 100 சதவீதம் பேருந்துகளை இயக்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளை உடனே தொடங்க வேண்டும்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் கழிக்கப்பட்ட விடுப்புகளையும், பறிக்கப்பட்ட சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும். தனியாருக்கு தாரை வாா்க்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள உணவகங்களை மீண்டும் போக்குவரத்து கழகமே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com