/

திண்டுக்கல்: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
Updated On :27 ஜனவரி 2024, 6:10 pm

DIN

திண்டுக்கல்லில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை கொடு, உணவு கொடு, வன்முறையற்ற வாழ்க்கை கொடு என்ற கோஷங்களை முன்வைத்து திண்டுக்கல் மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தின்போது பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான மின்சார மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். 
பெண்கள் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமையல் எரிவாயு உருளைக்கு பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.