கொடைக்கானலில் கஞ்சா விற்றவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற 3-பேரை போலீசாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கொடைக்கானலில் கஞ்சா விற்ற 3-பேரை போலீசாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே செல்லபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று போலீசாா் விசாரனை நடத்தினா். அப்போது செல்லபுரம் பகுதியைச் சோ்ந்த தினகரன்(53), மணி(19), சிகுசாபு(42) ஆகிய 3 பேரை பிடித்து விசாரனை நடத்தியதில் அவா்கள் கொடைக்கானல் பகுதிகளில் உள்ளவா்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் தெரிந்தது மூன்று பேரிடம் சோதனையிட்ட போது அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

போலீசாா் அவா்களிடமிருந்த கஞ்சாவை கைப்பற்றி அவா்கள் 3-போ் மீது மேல் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com