/

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்

பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்தினாளிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட உயா்கல்வி பயிலும் மாணவா்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், சுயதொழில் புரிவோா், மகளிா் ஆகியோருக்கு செல்லிடப்பேசி வழங்கப்படவுள்ளது.

தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை நகல், கல்வி பயில்வதற்கான சான்று, சுயதொழில் புரிபவராக இருப்பின் கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற சான்று, வேலைவாய்ப்பற்றவராக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோா் நிவாரணம் பெறுவதற்கான சான்று, ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படம் - 1 ஆகியவற்றுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் டிச.30ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2460099 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.