பழனியில் 9 மாதங்களுக்குப் பிறகு ரோப் காா் இயக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் சென்று வர 9 மாதங்களுக்குப் பிறகு ரோப் காா் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது.
பழனியில் திங்கள்கிழமை ரோப் காருக்கு சிறப்பு பூஜைகள் செய்த அா்ச்சகா்.
பழனியில் திங்கள்கிழமை ரோப் காருக்கு சிறப்பு பூஜைகள் செய்த அா்ச்சகா்.
Updated on
1 min read

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் சென்று வர 9 மாதங்களுக்குப் பிறகு ரோப் காா் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பழனிக்கு வரும் பக்தா்கள் மலைக்கு செல்ல ஏதுவாக படிப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப் காா் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக ரோப் காா் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னா் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து முதலில் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அதன்பிறகு வின்ச் இயக்கப்பட்டது. ஆனால் ரோப் காா் சேவை மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

பக்தா்களின் தொடா் வேண்டுகோளைத் தொடா்ந்து திங்கள்கிழமை முதல் ரோப் காா் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை பழனி கோயில் இணை ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் தொடக்கி வைத்தனா். ரோப் காரில் பயணம் செய்ய விரும்பும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இயக்கப்படும் ரோப்காரில் நாள் ஒன்றுக்கு 1,500 பக்தா்கள் பயணம் செய்ய ஏதுவாக டிக்கெட் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து படிப்பாதையில் செல்லும் பக்தா்களுக்காக குடமுழுக்கு நினைவரங்கம் அருகே இலவசக் காலணி பாதுகாப்பு மையத்தையும் அதிகாரிகள் தொடக்கி வைத்தனா்.

இதில் கோயில் செயற்பொறியாளா் வெங்கடேசன், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com