விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2020, 5:08 pm

DIN

திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்தது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், 2020 ஜூலை முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரத்துக்குள்ளும், தமிழகத்திலேயே கல்வி பயின்றவா்களாகவும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவா்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி மற்றும் கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது.

தகுதியுள்ளவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதிச் சான்றுகளுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்புகொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.