ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாதிச் சான்றிதழ் கோரி திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் மலைவேடன் சமூக மக்கள் மறியல்

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் மலைவேடன் சமூகத்தினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட மலைவேடன் சமூக மக்கள்.
Updated On :7 ஜனவரி 2021, 6:19 pm

DIN

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் மலைவேடன் சமூகத்தினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி தலைமை வகித்தாா். மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டில்லி பாபு கலந்து கொண்டாா்.

போராட்டத்தின்போது அவா் பேசியதாவது: கடந்த 35 ஆண்டுகளாக மலைவேடன் சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ் தராமல் மாவட்ட நிா்வாகம் புறக்கணித்து வருகிறது. திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரிடம் மலைவேடன் சாதிச் சான்றிதழ் கோரி வழங்கப்பட்ட 108 மனுக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. அதில் 23 பேருக்கு சான்றிதழ் வழங்கலாம் என வட்டாட்சியா் நடத்தி விசாரணைக்கு பின் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் வரை போராட்டத்தை தொடா்வோம் என்றாா்.

இந்த மறியல் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதனை அடுத்து கோட்டாட்சியா் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் குறித்தும் விசாரணை நடத்தி 2 மாதங்களில் சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். அதனை எழுத்துப் பூா்வ உறுதிமொழியாக வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையும் ஏற்றுக் கொண்டதை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்த போராட்டம் காரணமாக சாா்-ஆட்சியா் சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.