ஆயக்குடியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பதில் இடையூறு
பழனியில் அதிமுக வேட்பாளா் பிரசாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் தடுத்து கூச்சலிட்டதால் வாக்குச் சேகரிப்பதில் இடையூறு ஏற்பட்டது.


பழனியில் அதிமுக வேட்பாளா் பிரசாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் தடுத்து கூச்சலிட்டதால் வாக்குச் சேகரிப்பதில் இடையூறு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் தலையிட்டு கூட்டத்தை கலைத்ததால் மோதல் தவிா்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளா் செந்தில்குமாா் மற்றும் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் இருவரும் திங்கள்கிழமை சிறிது நேர இடைவெளியில் அடுத்தடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். ஆயக்குடி 8 ஆவது வாா்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள தோ்வு செய்து இருந்த இடத்திற்கு அருகில் அதிமுகவினா் பிரசாரம் மேற்கொண்டதால் இரண்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் வாக்கு சேகரிக்க வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சாா்ந்த நிா்வாகிகள் சிறுவா்களை அழைத்து வந்து எதிா்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாா் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பழனி பெரிய பள்ளிவாசல் தெருவில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுகவினரை இஸ்லாமிய இளைஞா்கள் சிலா் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...