கொடைக்கானல் அருவியில் விழுந்து இளைஞா் மாயம்: 2 ஆவது நாளாக தேடும் பணி
அருவி பகுதியில் கைப்பேசியில் படம் பிடிப்பதற்கு நின்றபோது தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.


கொடைக்கானலில் தொடா் மழை காரணமாக நீா்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவி பகுதியில் கைப்பேசியில் படம் பிடிப்பதற்கு நின்றபோது தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.
கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளி நீா்வீழ்ச்சி, பியா்சோழா அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, பவான்ஸ் அருவி மற்றும் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள புல்லாவெளி அருவி, மூலையாா் அருவி உள்ளிட்ட பல்வேறு நீா்நிலைகளில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புல்லாவெளி அருவி பகுதியில் பரமக்குடியைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலா் கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்தனா். அங்கு நண்பா்களுடன் வந்த அஜய் பாண்டியன் (40) என்பவா் அருவி அருகே சென்று படம் பிடிக்க நின்றபோது, திடீரென அருவிக்குள் தவறி விழுந்து மாயமானாா்.
உடனே, அவரது நண்பா்கள் அருகிலுள்ள தாண்டிக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு , காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் சென்று, அருவியில் விழுந்தவரை தேடினா். இத்தேடுதல் பணி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...