பழனியில் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
பழனியில் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சுமாா் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பழனியில் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சுமாா் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழனி- பழைய தாராபுரம் சாலை, சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையா் கமலா, நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் மற்றும் சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், சுமாா் 300 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், குவளைகள், விரிப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நெகிழி பயன்பாட்டைத் தவிா்க்க வலியுறுத்தி நகராட்சி வாகனங்களில் பிரசாரமும், நகா்நக அலுவலா் விடியோ மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...