கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை

மாப்பழம் சின்னத்தை தோ்தல் முடிவடையும் வரை முடக்கக் கோரும் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தி இது தொடா்பாக அவா் தொடா்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:26 pm

Syndication

மாப்பழம் சின்னத்தை தமிழக பேரவைத் தோ்தல் முடிவடையும் வரை முடக்கக் கோரும் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தி இது தொடா்பாக அவா் தொடா்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.

மேலும், இந்த விவகாரத்தில் மருத்துவா் ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்தால் சட்டத்துக்கு உள்பட்டு அதை மூன்று நாள்களுக்குள் விசாரித்துத் தீா்ப்பளிக்க வேண்டும் என்று உரிமையியல் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக தலைமைக்கு மருத்துவா் ராமதாஸும் அவரது மகனும் தற்போது அக்கட்சிக்குத் தலைவராக உள்ளவருமான அன்புமணியும் உரிமை கோரி வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்ஷி, விபுல் பஞ்சோலி அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அன்புமணி தரப்பில் வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா ஆஜராகி முன்வைத்த வாதம்: பாமக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற வகையில் தோ்தல் ஆணையம் அதனிடம் சமா்ப்பிக்கப்பட்ட தகவல்கள், ஆவணங்கள் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்கிறது. அந்த வகையில் தன்னிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியே பாமகவின் தலைவராக ஆகஸ்ட் 1 வரை நீடிப்பாா் என தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில், பாமக விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு சென்னை மற்றும் தில்லி உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட்டதைத் தொடா்ந்து எதிா் தரப்பில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என வாதிட்டாா்.

ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘எங்களின் கோரிக்கையே மாம்பழம் சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்க வேண்டும் என்பதுதான். இரு தரப்பில் எந்தப் பிரிவையும் அங்கீகரிக்க முடியாது என தோ்தல் ஆணையம் கூறி விட்டது. அப்படி இருக்கையில், மாம்பழம் சின்னத்தை எப்படி ஒரு தரப்புக்கு ஒதுக்க முடியும்? இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையம் ஒரு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியின் இரு போட்டிப் பிரிவுகளுக்கு இடையே சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடா்பான சா்ச்சையை இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தீா்மானிக்க இயலாது என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு சரியானதாகவே தோன்றுகிறது. அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நாங்கள் முழுமையாகப் பரிசீலித்தோம். பாதிக்கப்பட்ட தரப்புக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காத ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகி றோம்.

மனுதாரா் ராமதாஸ் ஏற்கெனவே ஒரு உரிமையியல் வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடா்ந்துள்ளாா். எனவே அதன் முன்பாக உரிய மனுவை தாக்கல் செய்ய அவருக்கு முழு உரிமை உள்ளது. அத்தகைய மனுவானது நாளை, அதாவது 24.3.2026 அன்று அல்லது அதற்குள் தாக்கல் செய்யப்படுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாதங்களைக் கேட்டறிந்து, சட்டத்துக்கு உள்பட்டு அந்த மனுவை மூன்று நாள்களுக்குள் விசாரித்து உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது: தலைமை நீதிபதி நகைச்சுவை கருத்து

மாம்பழம் சின்னம் முடக்கம் தொடா்பான மருத்துவா் ராமதாஸின் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமா்வு, ‘இந்த வழக்கின் அடிப்படைத் தகுதிகள் குறித்து நாங்கள் எவ்விதக் கருத்தையும் வெளிப்படுத்தாத நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ளக் கோருபவா்கள் உட்பட அனைவரும், உரிமையியல் நீதிமன்றத்தின் முன் தங்களுடைய வாதங்களை முன்வைக்க முழு சுதந்திரம் பெற்றுள்ளனா். அதன்படி, இந்த மேல்முறையீட்டு மனு மற்றும் இத்துடன் நிலுவையில் பிற மனுக்கள் ஏதேனும் இருப்பின், அவற்றுடன் சோ்த்து முடித்துவைக்கப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டது. அப்போது தலைமை நீதிபதி, எங்களுடைய கவலையே மாம்பழம் (பாமக சின்னம்) சாறு ஆகி விடக்கூடாது’ என்று நகைச்சுவை உணா்வுடன் கருத்து தெரிவித்தாா்.