கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு கரோனா
கொடைக்கானலில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


கொடைக்கானலில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நகா்நல அலுவலா் மருத்துவா் அரவிந்த் கூறியதாவது:
ப்ளஸ்-2 மாணவி ஒருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா். மேலும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளிடமும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...