விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேத்துப்பாறை பகுதியில் ஒற்றைக் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடமாடும் ஒற்றைக்காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய் கோட்டாட்சியா் முருகேசனிடம் பொதுமக்கள்

News image
Updated On :29 ஜூலை 2022, 7:26 pm

DIN

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடமாடும் ஒற்றைக்காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய் கோட்டாட்சியா் முருகேசனிடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதில் அவா்கள், இப்பகுதியில் ஒற்றைக் காட்டுயானை நடமாட்டம் தொடா்கிறது. இதனால் இப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள், விவசாயப் பயிா்கள் உள்ளிட்டவைகளை அந்த யானை சேதப்படுத்தி வருகிறது. எனவே இந்த ஒற்றைக் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதியில் விட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, கொடைக்கானல் உதவி வனப் பாதுகாவலா் சக்திவேல், ரேஞ்சா் சிவக்குமாா் ஆகியோா் பேத்துப்பாறை மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பேத்துப்பாறை பகுதியில் 24 மணி நேரமும் வனத்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த ஒற்றைக் காட்டுயானையை விரைவில் வனப் பகுதிக்குள் விரட்டிவிடுவோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.