விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:31 pm

DIN

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும். வடகவுஞ்சிப் பகுதியில் 1978-ம் ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதிகளில் விவசாயப் பொருள்களை கொண்டு வருவதற்கு வருவாய் நிலங்கள் வழியாக விவசாயிகள் சென்று வருகின்றனா். அந்த பாதையை பயன்படுத்துவதற்கு வனத்துறையினா் அனுமதிக்க வேண்டும். கொடைக்கானல் பகுதிகளில் வெள்ளைப் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் சரியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் கூறியதாவது: கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள 10 மரங்களை அகற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடகவுஞ்சி பகுதியில் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல வருவாய் நிலங்களிலுள்ள பாதைகளை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், கொடைக்கானல் வன உதவி பாதுகாவலா் சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் பரதன், ரேஞ்சா் சிவக்குமாா் உள்ளிட்ட பல்வேறுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.