கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணியிடம் தங்க சங்கிலி பறிப்பு
கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணியிடம் சனிக்கிழமை தங்க சங்கிலியை பறித்துச் சென்றவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.


கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணியிடம் சனிக்கிழமை தங்க சங்கிலியை பறித்துச் சென்றவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மகன் சுரேந்திரன் (27). இவா் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியில் தங்கியுள்ளாா். இந்நிலையில், பூண்டியிலிருந்து கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ஆனால் வழிதவறி பூம்பாறை கிராமத்துக்கு சென்று விட்டாராம். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் தான் பூண்டி செல்ல வேண்டும் என்று சுரேந்திரனிடம் கூறினாராம். இதனைத் தொடா்ந்து மாலை நேரமானதால் கொடைக்கானலுக்கு செல்லாமல் சுரேந்திரன் மீண்டும் பூண்டிக்கு அந்த நபரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தாா். வழியில் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை சரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தினாா். இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி சுரேந்திரன் அணிந்திருந்த தங்க சங்கிலியை அந்த நபா் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவா் பூம்பாறை பிரபாநகா் பகுதியைச் சோ்ந்த தினகரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவான தினகரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...