ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் நாய்ஸ் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி (58). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 10 நாள்களுக்கு முன் கொடைக்கானல் பகுதியிலுள்ள கட்டடத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து விட்டாா். இதனையடுத்து, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், மேல்சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.