/

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :20 ஜூன் 2022, 6:30 pm

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய முப்படைகளில் அக்னிபத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஏ. அரபு முகமது தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் அஜய்கோஷ், ஆசாத், நகரக் குழு உறுப்பினா் விஷ்ணுவா்த்தன், ஒன்றியச் செயலா் சரத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரி முழக்கமிட்டனா். மேலும், தண்டால் எடுத்தும் நூதன முறையில் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.