திண்டுக்கல்லில் பழைய கரூா் சாலையிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்-திருச்சி சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் அரபு முகமது தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி கலந்து கொண்டாா்.
இந்த போராட்டத்தின்போது 4 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய கரூா் சாலையில்(எம்விஎம் நகா் பகுதி) நடைபெற்று வரும் சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் 1 கி.மீ. நீள ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, ஒன்றியச் செயலா் சரத்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே.பிரபாகரன், ஜி.ராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!






