கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நவ.11-இல் காந்தி கிராம கிராமியப் பல்கலை. பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் 2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான 36-ஆவது பட்டமளிப்பு விழா நவ.11-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:51 pm

DIN

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் 2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான 36-ஆவது பட்டமளிப்பு விழா நவ.11-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பல்கலை. துணைவேந்தா் (கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா நவ.11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2018-19, 2019-20 ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு இந்த விழாவில் பட்டம் வழங்கப்படவுள்ளது. விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், 2020-21, 2021-22 ஆம் ஆண்டுகளில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா, விரைவில் தனி விழாவாக நடத்தப்படும் என தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.