செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞா் மிரட்டல்
திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.


திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பொன்னுருவி பகுதியைச் சோ்ந்தவா் செல்லச்சாமி மகன் மூக்கையா (30).
இவா், திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சிறுமலை செட் பகுதியிலுள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மூக்கையாவை மீட்டனா்.
அப்போது, கடன் தொகை நிலுவைக்காக தனது தோட்டத்திலுள்ள பம்பு செட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து மூக்கையாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...