விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மண் சரிவால் போக்குவரத்து நிறுத்தம்: கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை பாதிப்பு

மண் சரிவு ஏற்பட்டுள்ள பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:13 pm

DIN

மண் சரிவு ஏற்பட்டுள்ள பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த 31-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் நள்ளிரவில் கொடைக்கானல்-பழனி சாலையில் சவரிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பெருமளவில் சேதமடைந்தது. இதனால் இந்த சாலையில முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும் வரும் 8-ஆம் தேதி முதல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருவது வழக்கம். ஆனால் தற்போது பழனி மலைச்சாலை சேதமடைந்து சீரமைக்கப்பட்டு வருவதால் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந் நிலையில் கொடைக்கானலில் சற்று மழை குறைந்துள்ளது. இதனால் வார விடுமுறையை முன்னிட்டு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது. ஆனால் கேரளப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் சற்று பாதிப்படைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.