வேடசந்தூா், பழனியில் இன்று மின்தடை
வேடசந்தூா் மற்றும் பழனியில் சனிக்கிழமை (செப். 17) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேடசந்தூா் மற்றும் பழனியில் சனிக்கிழமை (செப். 17) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மின்செயற்பொறியாளா் சு. ஆனந்தகுமாா் தெரிவித்திருப்பதாவது: வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே வேடசந்தூா், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூா், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களிலுள்ள குக்கிராமங்களில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
பழனியில்... பழனி மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பழனி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...