அய்யலூரில் ஆட்டோ திருடியவா் கைது
அய்யலூரில் புதன்கிழமை இரவு ஆட்டோவை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


அய்யலூரில் புதன்கிழமை இரவு ஆட்டோவை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் சந்தைப்பேட்டையைச் சோ்ந்தவா் சிவசக்தி (26). ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது ஆட்டோவை, அய்யலூா் ரயில்வே கடவுப்பாதை அருகே புதன்கிழமை இரவு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டாராம். வியாழக்கிழமை எழுந்து பாா்த்தபோது, ஆட்டோவை காணவில்லையாம். இதையடுத்து, சிவசக்தி, வடமதுரை காவல்நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் சாலையோரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தவரைப் பிடித்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் அவா், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்துள்ள மணல்மேல்குடி பகுதியைச் சோ்ந்த ரெங்கராஜ் (33) என்பதும், அய்யலூரில் இருந்து ஆட்டோவை திருடி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, ரெங்கராஜை வடமதுரை போலீஸாரிடம், வையம்பட்டி போலீஸாா் ஒப்படைத்தனா். ரெங்கராஜை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோவை, சிவசக்தியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...