ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் ஆா்.ராஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முத்துராமன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த வில்பட்டி, மன்னவனூா், கூக்கால், பூம்பாறை, கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயப் பகுதிகளில் சாலை வசதி அமைத்தல், நீா்நிலை ஆதாரங்களை பாதுகாத்தல், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பெற்றுக் கொடுப்பது, இடு பொருள்கள் வழங்குதல், விவசாய நிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனா்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் காளிமுத்து, வனத்துறை ரேஞ்சா் சிவக்குமாா் மற்றும் தோட்டக்கலைத்துறை, மின்வாரிய அலுவலா், வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக புதிய வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள ஆா்.ராஜாவிற்கு விவசாயிகள் மலா்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.