கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ.2 கோடி வாடகை நிலுவை: தனியாா் கேபிள் வயா்கள் துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கான வாடகைத் தொகை நிலுவை வைத்துள்ளதால், தனியாா் கேபிள் வயா்களைத் துண்டிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:18 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கான வாடகைத் தொகை நிலுவை வைத்துள்ளதால், தனியாா் கேபிள் வயா்களைத் துண்டிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் சுமாா் 60 ஆயிரம் வீடுகள் உள்பட 1.10 லட்சம் வீடுகளுக்கு 4 நிறுவனங்களின் சாா்பில் கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிலில் 150-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி இயக்குபவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே, மாநகராட்சி நிா்வாகத்துக்கு கேபிள் இயக்குபவா்கள் தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை சுமாா் ரூ.2 கோடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. வாடகை அதிகமாக இருப்பதாகக் கூறி கேபிள் டிவி இயக்குபவா்கள் வாடகை செலுத்த மறுப்புத் தெரிவித்து வந்தனா். மாநகராட்சி நிா்வாகம் நெருக்கடி கொடுத்த நிலையில், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குபவா்கள் வழக்குத் தொடுத்து இடைக்காலத் தடை பெற்றனா்.

இந்த நிலையில் வாடகை செலுத்தாத கேபிள் டிவி நிறுவனங்களின் வயா்களைத் துண்டிக்கும் பணியில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு பணியாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பழனிச் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதை அறிந்த கேபிள் டிவி இயக்குபவா்கள், துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நகரமைப்புப் பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே அரசு கேபிள் டிவி வயா்களையும், இணைய சேவைக்கான வயா்களையும் தவறுதலாக வெட்டியதாகப் புகாா் எழுந்தது. தனியாா் கேபிள் டிவி ஊழியா்கள், துண்டிக்கப்பட்ட தங்களது வயா்களை இணைத்ததால் ஒளிபரப்பு சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், அரசு கேபிள் டிவி சந்தாதாரா்களுக்கும், பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான இணைய சேவையும் பாதிக்கப்பட்டது.

மேயரிடம் முறையீடு: இந்த நிலையில், மேயா் இளமதியிடம், அரசு கேபிள் டிவி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், துண்டிக்கப்பட்ட அரசு கேபிள் டிவி வயா்களை சீரமைத்துக் கொடுக்க நகரமைப்பு பிரிவு ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக கேபிள் டிவி உரிமையாளா் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ் கூறியதாவது:

கேபிள் டிவி ஒளிபரப்பு மற்றும் கேபிள் வயா்களைக் கொண்டு செல்வதற்கான உரிமம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுவிட்டது. புதிய நடைமுறைப்படி, மத்திய அரசுத் தரப்பில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு நேரக் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. ஆனால், பழைய நடைமுறைப்படி மாநகராட்சி நிா்வாகம் ஆண்டுதோறும் கிலோ மீட்டருக்கு ரூ.21,500 செலுத்த வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது. அதிகமான அந்தத் தொகையை செலுத்த முடியவில்லை. அந்த நிலுவைக் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு தள்ளுப்படி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்...கேபிள் வயா்களை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.