பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. 2.92 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, உண்டியல்கள்
திங்கள்கிழமை திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள், கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 2 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 145 கிடைத்தது.
இதுதவிர தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், சங்கிலி, காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன பிஸ்கெட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
தங்கம் 811 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 400 கிராமும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 503- ம் கிடைத்தன. இதுதவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.47 கோடி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


