திண்டுக்கல்
ஆடி அமாவாசை: வைகையில் நீராடல்
ஆடி அமாவாசையையொட்டி, நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் ஏராளமானோா் புனித நீராடினா்.
ஆடி அமாவாசையையொட்டி, நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் ஏராளமானோா் புனித நீராடினா்.
அணைப்பட்டி ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ள வைகை ஆற்றுப் பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்தனா்.
இவா்கள் வைகை ஆற்றில் நீராடி தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, சூரியனை வழிபட்டனா். ஆஞ்சநேயா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனா்.